வழிபடும் முறைகள்

Satatcharam

சடாட்சர வேல் தீபத்தை தினமும் வீட்டில் அல்லது கோவில்களில் வைத்து வழிபடலாம். ஆண், பெண், குழந்தைகள் என்று அனைவரும் இந்த தீபத்தின் சக்தியால் விரும்பிய வழிபாடுகள் செய்யலாம்.இதற்கென சிறப்பான மிகவும் கஷ்டமான விரதமுறைகளை கடைபிடிக்க வேண்டியதில்லை. நீங்கள் வீட்டில் விளக்கேற்றியோ அல்லது கோவில்களில் விளக்கேற்றியோ எவ்வாறு வழிபடுவீர்களோ அதைப்போலவே இதில் குறிப்பிட்ட வழிமுறைகளின்படி வழிபட்டால் போதுமானது. தினமும் வழிபட முடியாத சூழ்நிலைகளில் செவ்வாய் கிழமைகள், சஷ்டி திதி, அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் வழிபட விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும். சடாட்சர வேல் தீபத்தை முதன் முதலில் பயன்படுத்தும் முன்னால் வேல் மற்றும் வேல் யந்திரத்திற்கு பசும்பாலில் அபிஷேகம் செய்து பின்னர் பன்னீர் கொண்டு கழுவி சுத்தமான துணியில் துடைத்து அதற்கு சந்தனம் குங்குமம் சாத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் யந்திரத்தையும் வேலையும் தண்ணீர் கொண்டு கழுவவோ அல்லது புளி,எலுமிச்சம் பழம் அல்லது பீதாம்பரி பொடி கொண்டு துலக்கவோ கூடாது. காரணம் அதில் மந்திரங்களின் சக்திகள் அடங்கி உள்ளது.

வேல் யந்திரம் மற்றும் வேல் ஆகிய இரண்டையும் தவிர சடாட்சர தீபத்தின் பகுதிகளை
தண்ணீர் கொண்டு துலக்கலாம் தவறில்லை. தீபத்தை துலக்கிய பின்னால் யந்திரத்தையும் வேலையும் அதன் இடத்தில் பொருத்தி வைத்தல் வேண்டும். இந்த சடாட்சர வேல் தீபத்தை கீழ்க்காணும் மூன்று முறைகளில் வழிபட விரும்பிய பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சடாட்சர வேல் தீபத்தை கிழக்கு அல்லது வடக்கு அமர்ந்து வழிபட வேண்டும். சடாட்சர வேல் தீபத்தில் உள்ள வேல் மற்றும் யந்திரம் உங்களை நோக்கியவாறு இருக்க வேண்டும். தீபத்தை தரையில் வைத்து அதைச் சுற்றிலும் பூக்களை வைத்து ஆறு தீபங்களிலும் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

Murugar, Deepam, Vel deepam, Murugan thunai, Satatchara vel deepam, Vel murugan

வேலுண்டு வினையில்லை!

வழிபடும் முறைகள்

ஒவ்வொரு தீபத்தை ஏற்றும்போதும் கீழ்க்காணும்படி கூற வேண்டும

Murugar, Deepam, Vel deepam, Murugan thunai, Satatchara vel deepam, Vel murugan
முதல் தீபம் ஏற்றும்போது - குமரா போற்றி
Murugar, Deepam, Vel deepam, Murugan thunai, Satatchara vel deepam, Vel murugan
இரண்டாவது தீபம் ஏற்றும்போது - குகனே போற்றி
Murugar, Deepam, Vel deepam, Murugan thunai, Satatchara vel deepam, Vel murugan
மூன்றாவது தீபம் ஏற்றும்போது - வேலவா போற்ற
Murugar, Deepam, Vel deepam, Murugan thunai, Satatchara vel deepam, Vel murugan
நான்காவது தீபம் ஏற்றும்போது - கந்தா போற்றி
Murugar, Deepam, Vel deepam, Murugan thunai, Satatchara vel deepam, Vel murugan
ஐந்தாவது தீபம் ஏற்றும்போது - கார்த்திகேயா போற்றி
Murugar, Deepam, Vel deepam, Murugan thunai, Satatchara vel deepam, Vel murugan
ஆறாவது தீபம் ஏற்றும்போது -சண்முகா சடாட்சரனே போற்றி

என்று கூறி தீபங்களை ஏற்ற வேண்டும்.

இவ்வாறு தீபம் ஏற்றியபின்னர்,

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

என்று கூறி நாம் எதற்க்காக கோரிக்கை வைக்கின்றோமோ அதற்கு தகுந்தாற்போல்
கீழ்க்காணும் முறைப்படி வழிபட வேண்டும்.

Sasti Deepam

சடாட்சர வேல் தீபத்தில் வேலிற்கு சிவப்பு வஸ்த்திரம் சாத்தி கையேட்டில் கொடுத்துள்ள வேல் மாறல் மற்றும் அகத்தியரின் சடாட்சர மந்திரம் படிக்கும்போது எதிரிகள் பிரச்சனை, தீய சக்திகளின் பிரச்சனை, கடன் பிரச்சனை, குலதெய்வ தோஷம், சாபங்கள் நிவர்த்தி ஆகின்றது.

Sasti Deepam

சடாட்சர வேல் தீபத்தில் வேலிற்கு பச்சை வஸ்த்திரம் சாத்தி கையேட்டில் கொடுத்துள்ள வேல் மாறல் மற்றும் அகத்தியரின் சடாட்சர மந்திரம் படிக்கும்போது பணத்தட்டுப்பாடு நீங்கும், தொழில் இலாபம் உண்டாகும், வெளியில் கொடுத்த பணம் வரும், செல்வாக்கு உயரும். தன இலாபம், சொர்ண இலாபம் உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம் அமையும், வீடு வாகன யோகம், அதிர்ஷ்மும் பண வரவும் உண்டாகும்.

Sasti Deepam

சடாட்சர வேல் தீபத்தில் வேலிற்கு வெள்ளை வஸ்த்திரம் சாத்தி கையேட்டில் கொடுத்துள்ள வேல் மாறல் மற்றும் அகத்தியரின் சடாட்சர மந்திரம் படிக்கும்போது குழந்தைகள் குணம் மற்றும் படிப்பு உயர்வடையும், பதவி, மதிப்பு, மரியாதை உண்டாகும், வேலை, சமூக அந்தஸ்து கிடைக்கும்,

பொதுவான வேண்டுதல்கள்

வேலில் எந்த வஸ்த்திரமும் கட்டாமல் பொதுவான எந்த வேண்டுதல்களையும் வைத்துவழிபடலாம்.

மேற்கண்ட முறைகளில் உங்களின் வேண்டுதல்களுக்கு தகுந்தாற்போல் ஆறு செவ்வாய்
கிழமைகள், அல்லது ஆறு சஷ்டி தினங்கள் அல்லது ஆறு கிருத்திகை நட்சத்திர தினங்கள்
என்று வழிபட்டு ஸ்ரீ முருகப்பெருமானின் கருணையால் அனைத்து நற்பலன்களையும் பெறலாம்.
சடாட்சர வேல் தீபத்தை வீட்டில் வைத்து வழிபடும்போது ஆறு படை வீடுகளில்
குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானை உங்கள் வீட்டில் ஒரே சேர வழிபடுவதற்கு சமமான
பலன்கள் கிடைக்கின்றது.

கோவில்களில் வழிபடும் முறை:

மேற்குறிப்பிட்ட முறைகளின்படியே கோவில்களில் வைத்து வழிபட்டு அதிகமான நற்பலன்களை பெறலாம். கோவில்களில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு சடாட்சர தீபத்தைச் சுற்றிலும் பூக்களை வைத்து ஆறு தீபங்களை ஏற்றி அகத்தியர் மந்திரத்தையும், வேல் மாறலையும் படிக்க வேண்டும். வேல் மாறல் படிப்பதில் சிரமப்படுபவர்கள் கையேட்டில் கொடுத்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியரின் 108 நாமாவளிகளை படிக்கலாம். கோவில்களில் இவ்வாறு தீபம் ஏற்றி வழிபட்ட பின்னால் தீபத்தை கையில் எடுத்து  தீபத்தில் உள்ள வேல் மூலவரின் சன்னதி நோக்கி இருக்கும்படி காட்டி வேண்டிக்கொள்ள வேண்டும்.

கோவில்களில் அல்லது வீடுகளில் கூட்டு பிரார்த்தனை முறை:

பொதுவாக கோவில்களில் அல்லது வீடுகளில் அல்லது மண்டபங்களில் விளக்கு பூஜைகள் நடப்பது வழக்கம். அதேபோல் சடாட்சர வேல் தீபத்தை ஒரு குழுவாக சேர்ந்து 21
அல்லது 54 அல்லது 108 என்ற அடிப்படையில் சடாட்சர வேல் தீபம் ஏற்றி அகத்தியர் மந்திரம், வேல் மாறல் அல்லது ஸ்ரீ சுப்பிரமணியா 108 நாமாவளிகளை படித்து விரும்பியதை வேண்டி நிறைவேற்றிக் கொள்ளலாம். கூட்டு பிராத்தனைக்கென்று தனியான சக்தி ஒன்று உள்ளது. அந்த கூட்டு பிராத்தனையால் நிறைய நன்மைகளையும் அளவற்ற அருளையும் இறைவனிடமிருந்து பெற முடியும்.

வேலுண்டு வினையில்லை!

சடாட்சர தீபம் உண்டு குறையில்லை!!